- Advertisement -
சமீபத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஒரு நேர்காணலில் கூறியதாவது, எனக்கு என்ன புரிதல் இருக்கோ அதைத்தான் சொல்ல முடியும். நான் பேசறது எல்லாம் தப்பா இருக்கலாம். நான் சொல்றதுதான் சரின்னு எப்படி இருக்க முடியும்? நாம பிறக்கும் போதே ஞானத்தோடு பிறக்கிறது இல்லை. ஸ்கூலுக்கு போனா சொல்லிக் கொடுத்தாங்க. வீட்டுல சொல்லிக் கொடுத்தாங்க. இல்லைன்னா புக் படித்து தெரிஞ்சுக்கிட்டோம். எல்லாமே உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது தான். இந்தி டீச்சர் எனக்கு இந்தி சொல்லி கொடுத்தாங்க. ஹமாரி ராஷ்டர பாஷா ஹை ன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அது இல்லைன்னு புரிய ரொம்ப நாளாச்சு. அத பத்தி படிக்கும் போது தான் இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை என்று தெரிந்தது. இல்லை எனக்கு டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்கன்னு அதுதான் சரின்னு இருக்க முடியுமா? என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியிருக்கிறார்.





