- Advertisement -
தமிழ் சினிமாவில் மேயாத மான் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இந்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த ராஜ்வேல் என்பவரை பல ஆண்டுகளாக பிரியா பவானி சங்கர் காதலித்து வந்தார். நேற்று அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பிரியா பவானி சங்கர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ராஜ்வேல் பிரியா பவானி சங்கர் திருமணம் நடந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இந்த திருமணம் நடந்துள்ளது. மணமக்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.





