- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யை, விஜய்னு கூப்டாதீங்க... ரசிகர்களை கடுப்பேற்றிய புஸ்ஸி ஆனந்த்... பின்ன, எப்படிதான் கூப்பிடறது... அவரே விளக்கியிருக்கார்...

விஜய்யை, விஜய்னு கூப்டாதீங்க… ரசிகர்களை கடுப்பேற்றிய புஸ்ஸி ஆனந்த்… பின்ன, எப்படிதான் கூப்பிடறது… அவரே விளக்கியிருக்கார் பாருங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் தொடங்கி வாரிசு திரைப்படம் வரை விஜய் கண்டு வந்த உயரங்கள் ஏராளம். இப்போது ஊர் போற்றும் தளபதியாக இருக்கும் விஜய், ஒரு காலத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரே தொடர்ந்து விஜய்யை வைத்து படங்களை இயக்கி வந்தார். நாளைய தீர்ப்பு, செல்வா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என வரிசையாக ஒவ்வொரு படங்களும் இறங்க, எந்தக் காவியமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த நேரத்தில் தான், விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக திரைப்படத்தின் நடித்தார் விஜய்.

காதலை மாறுபட்ட கதைகளத்தில் விவரித்த இந்த திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கும் மிகப்பெரிய திருப்புமுனையை இந்த திரைப்படம் கொடுத்தது. இதன் பிறகு காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படங்கள் விஜய்க்கு புதிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தன.

இந்த இரண்டு காதல் திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் செம ஹிட் அடிக்க, வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டார் விஜய். பிறகு குஷி, பிரியமானவளே, பத்ரி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு, கில்லி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தரணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் திரைக்கதை, அனல் பறக்கும் வகையில் விறுவிறுப்பாக அமைந்ததால் கில்லியை கொண்டாடினர் ரசிகர்கள்.

இதன்பிறகு வெளியான போக்கிரி, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய்யின் மதிப்பை பல மடங்கு கூட்டின. தற்போது தமிழ் சினிமாவில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் அவர், விஜய் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை செயல்படுத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டின் போதும், குட்டிக்கதையை சொல்லி இணையத்தில் வைரல் ஆகிறார். சமீபத்தில் தனது இயக்கத்தின் மூலம், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

தற்போது மாதம் தோறும், பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகருடன் கூட்டத்தைக் கூட்டி வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர், தான் சிறு வயதில் இருந்தே விஜய் ரசிகை என்று பேச ஆரம்பித்தார். உடனே இடைமறித்த புஸ்ஸி ஆனந்த், தலைவரை பெயரைச் சொல்லி கூப்பிடாதீர்கள். தளபதி என்றே கூறுங்கள் என்று தெரிவித்தார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், அரசியல் வருவதற்கு முன்னே இவ்வளவு பெரிய சீன்னா என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்