- Advertisement -
சமீபகாலமாக தமிழ் சினிமா வன்முறை கதைக்களத்துக்கு மாறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக சினிமா தியேட்டர்களில் உள்ள வெண்திரை இரத்தம் வழிந்தோடும் சிவப்பு திரையாக மாறிவிட்டது. அதுவும் முன்னணி ஹீரோக்கள் படம் என்றால் திரையில் தெறிக்கும் இரத்தம் தன் மீதும் பட்டுவிட்டதா என ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு வன்முறை களங்களே படங்களாக வருகின்றன. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் படத்திலும் வன்முறை காட்சிகள் மிகுந்துள்ளன. இரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைந்துள்ளன. எனினும் சில காட்சிகளை மட்டுமே மியூட் செய்ய அறிவுறுத்திய சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதால் நடிகர் தனுஷ் நிம்மதி பெருமூச்சு விட்டதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





