- Advertisement -
Homeபொழுதுபோக்குத்ரிஷாவுடன் டூயட் வேண்டும் என அடம் பிடித்தாரா விஜய்?.. படத்திலிருந்து விலகினாரா லோகேஷ் கனகராஜ்?

த்ரிஷாவுடன் டூயட் வேண்டும் என அடம் பிடித்தாரா விஜய்?.. படத்திலிருந்து விலகினாரா லோகேஷ் கனகராஜ்?

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விஜய்க்கு இப்போது கட்டாயமாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது. இந்த சூழலில் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்திருப்பதால் கண்டிப்பாக படம் மாஸ் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து ஏற்கனவே கொடுத்த மாஸ்டர் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் திருப்பதியில் முடிவடைந்தது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் களமிறங்கியிருக்கிறது. சஞ்சய் தத்தான் மெயின் வில்லன் என்று கூறப்படுகிறது. அதேபோல் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகிய மூன்று பேரும் ஒரே குடும்பம் என்றும் அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைதான் ஒன்லைன் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

படத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருப்பது விஜய் – த்ரிஷா ஜோடி. கடைசியாக இரண்டு பேரும் குருவி படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு ஏறத்தாழ 14 வருடங்கள் இருவரும் ஸ்க்ரீனில் இணையவே இல்லை.கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேவரைட் ஜோடியான இவர்கள் லியோவில் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு இருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று காலையிலிருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது லியோவில் தனக்கும், த்ரிஷாவுக்கும் ரொமான்ஸ் காட்சிகளும், டூயட் பாடலும் வேண்டும் என்று விஜய் லோகேஷ் கனகராஜிடம் கேட்டதாகவும் அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறத். அதுமட்டுமின்றி ஒருகட்டத்தில் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் மோதல் ஏற்பட படத்திலிருந்து லோகேஷ் விலகிவிட்டார். பெரும்பான்மையான படத்தை அவரது நண்பரும், இயக்குநருமான ரத்னகுமார்தான் இயக்கியிருக்கிறார் என்று தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் இந்தத் தகவலில் துளிக்கூட உண்மை இல்லை என்று திரைத்துறையினர் கூறுகின்றனர். விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. விஜய் மீது வெறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற ஒரு வதந்தியை கிளப்புகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியா திரும்பி லியோ டப்பிங்கை முடிப்பார் என்று கூறுகிறார்கள்>

- Advertisement -

சற்று முன்