- Advertisement -
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரதிஷ்டம். பெண்களுக்கு எதிரான சதி செயல்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போகிறார்கள். எம்எல்ஏ அருள் விக்னேஷ் தவறு செய்திருப்பார் என்று தவெக சார்ந்தவர்களே கூறுகிறார்கள். கட்சியில் நடக்கும் தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் குழந்தைகளுக்கு கேக் ஊட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.





