- Advertisement -
ஆந்திராவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரடியாக தமிழக முதல்வர் விஜயையும் தமிழ்நாட்டு மக்களையும் விமர்சித்து இருக்கும் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உங்களுக்கு மசாலா வேண்டும் எனக்கு ரிசல்ட் வேண்டும் என்று அவர் பேசியிருப்பது தமிழக மக்களை கிண்டல் செய்யும் விதமாகவும் தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாகவும் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மசாலா நாயகன் விஜய் தமிழ்நாட்டுக்கு போதும்; ஆந்திராவுக்கு தொழில் வளம் பெருகும் ரிசல்ட் வேண்டும் என்று அவர் பேசியதாக தெரிய வந்துள்ளது.





