- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா கூறியதாவது, சென்னைக்கு நாங்க வந்த புதிதில் மொட்டை மாடியில் சிறிய இடத்தில் தான் பாரதிராஜாவுடன் நான் கங்கை அமரன் எல்லோரும் தங்கி இருந்தோம். மதிய உணவுக்கு வேலு மிலிட்டரி ஓட்டலில் ஒரு சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவோம். உனக்கு இவ்வளவு பங்கு, எனக்கு இவ்வளவு பங்கு என பிரித்து சாப்பிடுவோம். பல நேரங்களில் பாரதிராஜா வர தாமதமானால் அவருக்கு என எடுத்து வைத்த உணவையும் நாங்களே வேடிக்கையாக சாப்பிட்டு விடுவோம். கடைசியில் வெறும் இலை மட்டுமாவது மிச்சம் வைங்கடா என்று பாரதிராஜா ஜாலியாக திட்டுவார் என்று இளையராஜா அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.





