- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, எவ்வித ஆன்மீக புரிதலோ பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை இந்து சமய அறநிலையத் துறையின் அறங்காவலர் தேர்வு குழு உறுப்பினராக நியமித்தால் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். உடனடியாக வேல்முருகன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது முதலமைச்சருக்கு அரோகரா என்று கோஷமிட்ட பாடகர் வேல்முருகனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.





