- Advertisement -
Homeபொழுதுபோக்குரீவைஸிங் கமிட்டிக்கு சென்ற கராத்தே பாபு - நடிகர் ரவி மோகன் நடித்த இந்த படம்...

ரீவைஸிங் கமிட்டிக்கு சென்ற கராத்தே பாபு – நடிகர் ரவி மோகன் நடித்த இந்த படம் திரைக்கு வருவது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படம் சென்சருக்கு அனுப்பப்பட்டது. படத்தில் அரசியல் வசனங்கள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்ததால் இந்த படம் ரீவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. படத்தைப் பார்த்த சென்சார் குழு படத்திற்கு சான்றளிக்க மறுத்த நிலையில் முக்கிய அரசியல் புள்ளியை பற்றிய படமாக இருப்பதால் இந்த படம் ரீவைஸிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ரீவைஸிங் கமிட்டி இந்த படத்தை பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் வரை அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் கராத்தே பாபு படம் பொங்கலுக்கு பிறகு வெளியாகும் என்றும் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

சற்று முன்