- Advertisement -
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த எம்எஸ் தோனி நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் தல தோனிக்கு நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நீங்கள் எங்களுக்கு அளித்த அத்தனை மறக்க முடியாத நினைவுகளுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு முன்பு போல் இருக்காது. இருப்பினும் இனி மைதானத்தின் ஓரத்தில் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் வழிகாட்டுதல் தொடர்ந்து அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கட்டும் என்று நடிகர் தனுஷ் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





