- Advertisement -
சமீபத்தில் நடந்த ஓம் பட விழாவில் நடிகர் மம்முட்டி பேசியதாவது, நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா பெரிய இயக்குனர். யதார்த்தமாக அவர் நடித்த ஹபீபி என்ற திரைப்படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவில் அபூர்வமாக எடுக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கை திரைப்படமான அதில் கஸ்தூரிராஜாவின் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டேன். இவருக்கு நடிக்கவும் வருகிறது என்பது வியப்பாக இருந்தது. தனுஷ் இவரோட மகன்தான் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய விருது வாங்க சென்ற போது தனுஷின் அவரது அப்பா சிறப்பாக நடித்திருந்ததை சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார் என்று நடிகர் மம்முட்டி பேசியிருக்கிறார்.





