- Advertisement -
சமீபத்தில் நடந்த குரோர்பதி நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் கூறியதாவது, நான் நடிகர் தனுஷின் தீவிர ரசிகர். ஷமிதாப் படத்தில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். கொஞ்சம் தெரிந்தும் வைத்திருந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றியபோது அந்த நடிப்பை பார்த்த பிறகு தான் உண்மையிலேயே அவர் ஒரு அசாதாரணமான கலைஞர் என்று உணர்ந்தேன் என்று அமிதாப்பச்சன் கூறியிருக்கிறார்.





