- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, நீங்கள் 150 ரூபாய் சம்பாதித்தால் உங்களுக்கு 200 ரூபாய்க்கான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தால் உங்களுக்கு 2 கோடி ரூபாய்க்கான பிரச்சனைகள் இருக்கும். பணம் அதிகரிப்பதால் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைந்து விடுவதில்லை. மாறாக வருமானத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் அளவும் பொறுப்புகளும் பெரிதாகிக் கொண்டேதான் இருக்கின்றன என்று நடிகர் தனுஷ் முக்கிய அறிவுரையாக பணம் குறித்து கூறியிருக்கிறார்.





