- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்று அரசியல் செய்வதாக சொன்னீங்களே? இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க சிஎம்? - தவெக...

அன்று அரசியல் செய்வதாக சொன்னீங்களே? இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க சிஎம்? – தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எம்பி கனிமொழி!

- Advertisement -

செய்தியாளர்களிடம் இன்று பேசிய திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியான போது இதுகுறித்து விசாரித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன். அன்று என்னையும் பிற அரசியல் தலைவர்களையும் திமுகவையும் கேள்வி கேட்டவர்களும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதை கூட அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியவர்களும் இன்று என்ன சொல்ல போகிறார்கள்? காவல்துறையில் புகார் அளித்தும் பணியிடங்களில் அத்துமீறல்களை சகித்துக் கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் கள்ளக்குறிச்சி கலெக்டரை பாராட்டுகிறேன் என்று எம்பி கனிமொழி கூறியிருக்கிறார்.

சற்று முன்