- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் ராமர் வசனத்தை மேடையில் பேசிய முதல்வர் விஜய் - இந்த நடிப்பு எல்லாம்...

காமெடி நடிகர் ராமர் வசனத்தை மேடையில் பேசிய முதல்வர் விஜய் – இந்த நடிப்பு எல்லாம் தேவையா? – கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக முதல்வரான பிறகும் இன்னும் நடிப்பதை விடவில்லை. ஆனால் சினிமாவை விட இங்கு நன்றாக நடிக்கிறார் என்று திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்நிலையில் நேற்று பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அய்யய்யோ இவர் வந்துட்டாரே, கலாய்ப்பாரே என பேசி நடித்துக் காட்டினார். இது டிவி நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகர் ராமர் பேசிய நடித்த டயலாக். நேற்று விஜய் பேசியது இணையத்தில் வைரலான நிலையில், கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தவெக எம்எல்ஏ பிரச்னை பற்றி எரிகிறது. இந்த நேரத்தில் இந்த நடிப்பு தேவையா? என்று நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு திட்டி வருகின்றனர்.

சற்று முன்