- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க ஏன் அரசியலுக்கு வர்றீங்க? நடிகர் விஜயகாந்திடம் நேரடியாக கேட்ட பிரபல நடிகை - அதற்கு...

நீங்க ஏன் அரசியலுக்கு வர்றீங்க? நடிகர் விஜயகாந்திடம் நேரடியாக கேட்ட பிரபல நடிகை – அதற்கு கேப்டன் சொன்ன நச் பதில்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்திடம் ஒருமுறை பேசிய நடிகை வடிவுக்கரசி, உங்க பிறந்தநாள் வந்தாலே தையல் இயந்திரம் சக்கர நாற்காலி என்று மக்களுக்கு நிறைய உதவி செய்கிறீர்கள். பிறகு எதற்கு அரசியலுக்கு வருகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் தந்த விஜயகாந்த் கூறுகையில், எங்கள் தெருவுக்கு ஒரு தெருவிளக்கு போட வேண்டும் என்றாலும் கூட வரிசையில் நின்று அனுமதி வாங்க வேண்டும். அதுவே அதிகாரத்தில் இருந்தால் உடனடியாக செய்ய முடியும். இப்போது எல்லாம் 1000 பேருக்கு தான் உதவி செய்ய முடிகிறது. அரசியலுக்கு வந்தால் அதை பல மடங்கு அதிகரிக்க முடியும். நானே கையெழுத்து போடலாம். இல்லையென்றால் கையெழுத்து போட வேண்டியவர்களை போடச் சொல்லலாம். மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை நடிகை வடிவுக்கரசி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்