- Advertisement -
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த டிரெயின் படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, நடிகர்கள் கமல்ஹாசன் சியான் விக்ரம் போன்ற மிகச்சிறந்த கலைஞர்களின் வரிசையில் இன்று இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர் விஜய் சேதுபதி தான். நடிப்பு கலையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ள விஜய் சேதுபதியின் திறமையை கமல்ஹாசனே ஒப்புக் கொள்வார் என்று மிஷ்கின் கூறி நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டி இருக்கிறார்.





