- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்துக்கு தேவையா? அழிக்க முடியாத அவமானம் நேர்ந்து விட்டது -...

இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்துக்கு தேவையா? அழிக்க முடியாத அவமானம் நேர்ந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கண்டனங்களை தெரிவித்ததுடன் தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாதுகாப்பை சிஆர்பிஎஃப் வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது. ஒரு அரசை நோக்கி இவ்வளவு காட்டமான வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை. இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்துக்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கு அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்