- Advertisement -
இதுவரை குடும்ப கதைகளை களமாக கொண்ட தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக மக்கள் காவலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மக்கள் காவலன் படத்தின் அதிரடியான போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நாளை 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தரும் டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள், அரசியல் காட்சிகள் காரணமாக ரீவைசிங் கமிட்டிக்கு சென்ற இந்த படத்துக்கு விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா, குறித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.





