- Advertisement -
பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி மகன் சிவக்குமார் நடித்துள்ள டெலிவரி பாய். இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது. அப்போது அவரிடம் நீங்கள் விஜயின் ரசிகர் என்று சொல்லி இருக்கீங்க. அவர் பையன் இப்போது சினிமாவுக்குள் வந்திருக்கிறார். ஜேசன் எடுக்கிற அடுத்த படத்துல உங்களுக்கு ஹீரோவா கூப்பிட்டால் போவீங்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவக்குமார், அவர் கூப்பிட்டால் இப்பவே கிளம்பி போயிடுவேன். அவங்க கூப்பிடுவாங்க என்றுதான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறினார். தந்தை லியோனி திமுக சேர்ந்தவராக இருந்தாலும் சினிமா மீது உள்ள அர்ப்பணிப்பால் அவரது மகன் ஜேசன் குறித்து இந்த கருத்தை கூறியிருப்பது, அப்பா திமுக மகன் தவெக ஆதரவாளர் என்பதை குறிக்கிறது.





