- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நேற்று வரை எதிர்ப்பு இன்று ஆதரிப்பது ஏன்? தமிழ்நாட்டின் உரிமை என்பது அரசியல் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடா? கொள்கையின் உறுதி இல்லாதவர்களால் மாநில உரிமையை எப்படி பாதுகாக்க முடியும்? இந்த நாடகங்களை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று திமுகவின் தொகுதி மறு வரையறை முடிவை மறைமுகமாக இயக்குனர் அமீர் விமர்சித்திருக்கிறார்.





