- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பழம்பெரும் நடிகை விஜயகுமாரி கூறியதாவது, எனக்கு கூட பிறக்காத அண்ணன் தான் எம்ஜிஆர். அவரை சேட்டா என்றுதான் அழைப்பேன். ஒருமுறை ஜானகியம்மா எனக்கு போன் செய்து, வீட்டுக்கு வந்துட்டு போ என்றார். நானும் வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்த எம்ஜிஆர், அம்முவை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கிட்டேன். இனிமேல் நீ அந்த பொறுப்புல இரு என்று சொன்னார். இல்லே, எனக்கு அரசியல் வேண்டாம். அது எல்லாம் எனக்கு தெரியாது என்றேன். இல்லே நீ இருந்துதான் ஆகணும் என்றார். சரி வீட்டுக்கு போய் யோசனை பண்ணிட்டு போன்ல சொல்றேன் சேட்டா என்றேன். அப்புறம் அவர் போன் பண்ணினா எடுக்காம ஜானகியம்மா போன் செஞ்சா பேசுவேன், எம்ஜிஆர் கிட்ட பேசாமல் இருந்துடுவேன் என்று நடிகை விஜயகுமாரி கூறியிருக்கிறார்.





