- Advertisement -
செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, நேர்மையான ஆட்சி தருவதாக கூறும் முதலமைச்சர் விஜய் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அதிகாரியே புகார் அளித்துள்ளதால் எம்எல்ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆண்டவனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்று சொன்ன முதலமைச்சர் விஜய் தங்கள் கட்சி எம்எல்ஏ தவறு செய்துள்ளார். அதற்கு அவர் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





