- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது, எம்ஜிஆரின் ஆரம்பகால கஷ்டங்கள் ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை போராட்டங்கள் குறித்து பலருக்கும் தெரியாது. தனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் படப்பிடிப்பு தளங்களில் மேக்கப் போட்டுக்கொண்டு அவர் மணிக்கணக்கத்தில் காத்திருந்தவர். 2 வேட்டிகள் 2 ஜிப்பாக்களுடன் அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய நாட்களும் இருந்தன. சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கி ராஜகுமாரி நாடோடி மன்னன் என உயர்ந்து 1977ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர் என்று நடிகர் சிவக்குமார் கூறியிருக்கிறார்.





