- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஆண்டனி மகள் உயிரிழப்பு.. லியோ படக்குழு எடுத்திருக்கு முடிவு என்ன தெரியுமா?

விஜய் ஆண்டனி மகள் உயிரிழப்பு.. லியோ படக்குழு எடுத்திருக்கு முடிவு என்ன தெரியுமா?

- Advertisement -

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் இருந்தார். சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக காவல் துறையினர் காவேரி மருத்துவமனையில் மீராவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும், அவரது ஆசிரியர்கள் மற்றும் தோழிகளிடம் விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மீராவுக்கு தவறான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது. அதேசமயம் அவர் மன உளைச்சலுக்கான காரணமும் தெரியவரவில்லை. இதனால் மீரா எதற்காக உயிரிழந்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. மீராவின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.

வீட்டிலிருந்து மீராவை தூக்கிக்கொண்டு முதலில் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர் குடும்பத்தினர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு பிறகு டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிம்பு, விஜய்யின் தாய் ஷோபா, சத்யராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

மீராவின் உடலானது இன்று கல்லறையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து லியோ படக்குழு ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி இன்று வெளியாகவிருந்த லியோ படத்தின் புதிய போஸ்டர் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் ஆண்டனி சாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களுடைய பிரார்த்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையால் லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுகிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

சற்று முன்