- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது மீராவுக்கு டிப்ரெஷனா?.. சான்ஸே இல்லை.. தோழிகளின் பெற்றோர்கள் சொல்வது என்ன தெரியுமா?

என்னது மீராவுக்கு டிப்ரெஷனா?.. சான்ஸே இல்லை.. தோழிகளின் பெற்றோர்கள் சொல்வது என்ன தெரியுமா?

- Advertisement -

இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் விஜய் ஆண்டனி. எப்போதுமே பாசிட்டிவாக பேசும் விஜய் ஆண்டனிக்கென்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அவருக்கு மீரா என்ற மகள் இருந்தார். அவருக்கு கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலுக்கான சிகிச்சை காவேரி மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க நேற்று அதிகாலை மூன்று மணிக்கு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் அறை கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி நிலையில் இருந்தார். உடனே வீட்டு பணியாட்கள் உதவியுடன் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு மகளின் உடலை கொண்டு சென்றார் விஜய் ஆண்டனி. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

பின்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் இருக்கும் வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் திணறினர். சூழல் இப்படி இருக்க நேற்று இறுதிச்சடங்கு நடப்பதாக இருந்தது.

ஆனால் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீராவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கிடைக்க கால தாமதம் ஆனதால் இன்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது. முதலில் தேவாலயத்தில் இறுதிசடங்கை முடித்துவிட்டு பிறகு கல்லறையில் சவப்பெட்டியில் வைத்து மீராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது விஜய் ஆண்டனி கதறி அழுது துடித்தார். அதை பார்த்தவர்களும் கலங்கினர்.

இந்நிலையில் மீரா குறித்து அவரது தோழிகளின் பெற்றோர் கூறுகையில், “பள்ளியில் அனைவரிடமுமே கலகலப்பாக பேசக்கூடியவர் மீரா. அவர் டிப்ரெஷனில் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் அருகில் யாரேனும் ஒருவர் டிப்ரெஷனில் இருந்தால் அவரையும் பேசி மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு வந்துவிடுவாள் மீரா.

அவளுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் தோன்றி முடிவு வந்தது என நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ரொம்பவே மனது கடினமாக இருக்கிறது. எனது மகளின் ரொம்ப க்ளோஸ்ட் ப்ரெண்ட் அவர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்கள் தினத்தன்று கூட மீரா நடனம் ஆடி, பாடல் பாடி அனைவரையும் அசத்தினார். ஆனால் அவளுக்கு மன உளைச்சல் என்று சொல்வதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

சற்று முன்