- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ பட தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டியதா ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்... சவுக்கு சங்கர் பகிரங்க...

லியோ பட தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டியதா ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்… சவுக்கு சங்கர் பகிரங்க குற்றச்சாட்டு… தயாரிப்பாளர் அளித்த விளக்கம் இதோ….

- Advertisement -

தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்க, அப்போது வெளியான இந்த திரைப்படம், வசூலில் சக்கை போடு போட்டது. அது மட்டுமல்லாமல், திரையரங்குகளை மாஸ்டர் திரைப்படம் புத்துயிர் பெறச் செய்தது.

இந்த நிலையில், தற்போது விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறச் செய்துள்ளது. இது முழு காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டும்தான். தனது முந்தைய படமான விக்ரமில், எல்சியூ கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த லோகேஷ், இதிலும் அதனை தொடர்வாரா என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

கிட்டதட்ட லியோவும் எல்சியு-வில் இருப்பதாகதான் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் லியோ படம், விக்ரம் மற்றும் கைதி திரைப்படங்களின் முன்பகுதியில் நடந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் விக்ரமில் நடித்த சில கதாபாத்திரங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, படத்திற்கான அப்டேட் பணிகள் தயாரிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. வரும் 19-ம் தேதி லியோ வெளியாகும் நிலையில், சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் அமைதியாக போரை தவிருங்கள், சதி திட்டத்திலிருந்து விலகுங்கள், போரை எதிர்கொள்ளுங்கள் போன்ற வரிகள் இடம் பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டின.

வரும் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இது குறித்து பேசியுள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், இசை வெளியீட்டு விழாவுக்கான அனுமதி கிடைக்க பெறவில்லை என்று தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். திமுக குடும்பத்தினரான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், லியோ படக்குழுவை மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லியோ தயாரிப்பாளரிடம் சென்னை, செங்கல்பட்டு, வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காட்டில் விநியோக உரிமையை கேட்டு மிரட்டுவதாக சவுக்கு சங்கர் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம், இணையத்தில் வைரலாக பலரும் சவுக்கு சங்கரின் பதிவை பகிர்ந்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டை லியோ தயாரிப்பாளர் லலித்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், சார் நீங்கள் கூறுவது எதுவும் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்