- Advertisement -
Homeபொழுதுபோக்குகேவலம் பணத்துக்காக இப்படி பண்ணலாமா? சிம்புவை வெளுத்து வாங்கிய பிரபலம்

கேவலம் பணத்துக்காக இப்படி பண்ணலாமா? சிம்புவை வெளுத்து வாங்கிய பிரபலம்

- Advertisement -

சிம்பு தற்போது தனது 48 ஆவது திரைப்படத்திற்காக இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இதனிடையே சிம்புவின் மீது பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ஒரு புகாரை வைத்துள்ளார்.

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தயாரித்தவர் ஐசரி கணேஷ். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழாவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு தன்னிடம் இரண்டு திரைப்படங்கள் நடித்துக்கொடுப்பதாக கூறி அட்வான்ஸ் வாங்கியதாகவும் ஆனால் அவர் நடித்துக்கொடுக்காமல் வேறு படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார் எனவும் புகார் வைத்துள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்காக தனது திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டுத்தான் வேறு திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

சிம்புவின் மீது ஐசரி கணேஷ் வைத்துள்ள இந்த பிராதுதான் இப்போது பேசு பொருளாக ஆகியுள்ளது. சிம்புவின் மீது ஒரு காலகட்டத்தில் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்பது போன்ற புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்துகொண்டு புது ஆளாக சிம்பு கம் பேக் கொடுத்தார். ஆனால் தற்போது மீண்டும் சிம்பு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், சிம்பு இது போன்ற சிக்கலில் மாட்டுவதற்கான காரணத்தை குறித்து கூறியுள்ளார்.

- Advertisement -

“நமது ரசிகர்கள் சிம்புவுக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும். யாருக்கும் சிரமம் கொடுக்காமல் படம் நடிக்க வேண்டும். ஒரு தயாரிப்பாளருக்கு நேர்மையாக இருக்கவேண்டும். ஒரு படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்திற்கு நடிக்க சென்றால்தானே சரியாக இருக்கும். ஆனால் ஒருவர் அதிகமாக சம்பளம் கொடுக்கிறார் என்று ஏற்கனவே ஒப்பந்தமான கம்பெனியிடம் காத்திருக்க சொல்வது, அதை விட வேறு ஒரு கம்பெனி அதிகமாக கொடுக்கிறார்கள் என்பதற்காக முந்தைய கம்பெனியை காத்திருக்க சொல்லிவிட்டு பாதியிலேயே வேறு படத்துக்கு தாவி விடுவது. இது போன்ற காரியங்களில் சிம்பு ஈடுபட்டு வருகிறார்” என கூறியுள்ளார்.

மேலும் அப்பேட்டியில் பேசிய அந்தணன், “ சிம்பு ஒரு மிக சிறந்த அறிவாளி, அவர் ஆன்மீக ரீதியாக பேசுவதை எல்லாம் கேட்கும்போது மிக பெரிய ஞானியாக இருக்கிறாரே என தோன்றும். அப்பேர்பட்ட ஒருத்தர் கேவலம் பணத்திற்காக ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்