- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்வளவு சுயநலமா இருக்கறீங்களே மேடம் - பிரபல நடிகையின் புரபஷனல் எதிக்ஸ் பார்த்து எரிச்சலான ரசிகர்கள்

இவ்வளவு சுயநலமா இருக்கறீங்களே மேடம் – பிரபல நடிகையின் புரபஷனல் எதிக்ஸ் பார்த்து எரிச்சலான ரசிகர்கள்

- Advertisement -

பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்படும் தமிழ் படங்கள், உரிய முறையில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தால் மட்டுமே, எதிர்பார்த்த கணிசமான லாபத்தை பெற முடியும். இதற்காகவே, பிரமோசன் என்ற பெயரில் பத்திரிகையாளர் சந்திப்பு, நடிகர், நடிகையர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா போன்றவை நடத்தப்படுகின்றன.

பிரமோசன் நிகழ்ச்சிகள் மூலம், ரசிகர்கள் மத்தியில் அந்த படங்களை அதிகமாக விளம்பரப்படுத்துகின்றனர். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பர்ஸ்ட் லுக், செகன்ட் லுக் போஸ்டர்கள், பாடல் வரிகள் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி, படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்வதும், பிரமோசன்தான்.

- Advertisement -

நடிகர்கள் கமல், ரஜினி, விஜய் போன்றவர்களே இந்த பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர், சில மாதங்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் படத்துக்கு சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்ட நட்சத்திரக்குழு பல முக்கிய நகரங்களுக்கு பிரமோசனுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நடிகை நயன்தாரா மட்டும் இதுபோன்று அவர் நடித்த படங்களின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள மாட்டார். இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த நிகழ்விலும், தலையை காட்ட மாட்டார். ஆனால், சம்பளம் மட்டும் பல கோடி ரூபாய் என பெற்று விடுவார். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் பிரமோசனுக்காக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் அழைத்தும் போக மறுத்து விட்டார்.

- Advertisement -

நயன்தாரா, இப்போது 9 ஸ்கின் என்ற உயர்தர அழகுசாதன பொருட்கள் விற்கும் புதிய நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். அவர் நடத்திவரும் பிஸ்னஸ்களில் இதுவும் ஒன்று. இதன் துவக்கவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கணவர் விக்கியுடன் பங்கேற்றார்.

தனது சொந்த நிறுவனத்தின் நைட் கிரீம் என்ற அழகுசாதன பொருளுக்காக, உச்சக்கட்ட கவர்ச்சியில், விளம்பர படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கமும் துவங்கி, அதில் தனது நிறுவன தயாரிப்புகளை பற்றிய விவரங்களை பதிவிட்டு விளம்பரப்படுத்தவும் துவங்கி இருக்கிறார்.

தன்னை பிரபலப்படுத்திய சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், கோடிக்கணக்கில் பணத்தை சம்பளமாக வாரித் தரும் தயாரிப்பாளர்களுக்கும் நோ சொல்லும் நயன்தாரா, தனது வியாபாரத்துக்காக மட்டுமே, பிரமோசன் செய்கிறார். இதை பார்க்கும் ர்சிகர்கள், இவ்வளவு சுயநலமா இருக்கறீங்களே மேடம் என, நயன்தாராவின் தொழில் தர்மத்தை எரிச்சலுடன் கலாய்த்து வருகின்றனர்,

- Advertisement -

சற்று முன்