- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் மிரண்டு போன நடிகை - கூல் பண்ண படுத்திருந்த அந்த பிரபல ஹீரோ...

ஷூட்டிங் ஸ்பாட்டில் மிரண்டு போன நடிகை – கூல் பண்ண படுத்திருந்த அந்த பிரபல ஹீரோ என்ன செஞ்சார் தெரியுமா?

- Advertisement -

சினிமாவில், சில காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் போது விசில் பறக்கும். கைதட்டல்கள் காதுகளை கிழிக்கும். ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அன்று முதல் இன்று வரை இது, தமிழ் சினிமா பார்க்கும் ரசிகர்கள், இப்படித்தான் தங்களது பாராட்டை தெரியப்படுத்தி வருகின்றனர். இதைத் தான் பல நடிகர்கள் ஆஸ்கர் விருதை விட இது உயர்ந்தது என, மனப்பூர்வாக சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில், கேமராவுக்கு முன் நின்று, பளீரிடும் மின்விளக்குகளுக்கு மத்தியில், பல பேர் முன்னிலையில் வசனம் பேசி நடித்து விடுவது என்பது மிக சாதாரணமான விஷயம் அல்ல. திரையில் சாதாரணமாக தோன்றும் சில காட்சிகளுக்கு, அந்த காட்சியில் நடித்தவர்கள், பல டேக்குகள் வாங்குவது எல்லாம் சாதாரணமாக நடக்கும் விஷயம்தான். இது. படக்குழுவினர் தினமும் சந்திக்கும் சாதாரண பிரச்னை தான்.

- Advertisement -

அறிமுக நடிகர்கள் மட்டுமின்றி, மிகப்பெரிய நடிகர்கள் கூட சில காட்சிகளில் அந்த சூழலுக்கு ஏற்ப தங்களது உணர்வுகளை முகபாவனைகளில் காட்ட தடுமாறுவது உண்டு. ஆனால், அந்த காட்சி திருப்தியாக வரும் வரை, இயக்குநர்கள் விடவே மாட்டார்கள். அது சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி. ஜெயிலர் படத்தில் கூட அப்படி ஒரு காட்சியில், டேக் வாங்கியது குறித்து, அந்த நீலாம்பரியிடம் இந்த படையப்பாவின் கெத்தே போய்விட்டது என ஜாலியாக, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்ட விழாவில் சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி, புன்னகை அரசி சிநேகா. விரும்புகிறேன் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் ஆனந்தம் படத்தில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கமல், விஜய், அஜீத், தனுஷ், அர்ஜூன் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்து, ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். கேஆர் விஜயாவுக்கு பின், தமிழ் சினிமாவின் புன்னகை அரசி இவர்தான்.

- Advertisement -

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் சிநேகா இப்போது ஷாட் பூட் த்ரீ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் 6ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரமோசனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சிநேகா, தனது சினிமா பயண அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

சிநேகா பேசுகையில், நடிகர் கமல் ஒரு லெஜண்ட். ஒரு காட்சியில் நடிக்க பலவிதமான ஸ்டைல்களை வைத்திருப்பார். கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தில், அப்பாஸ் ஜோடியாக நடித்தேன். பிறகு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தேன். அதில் ஒரு மருத்துவமனை காட்சியில் கமல், பெட்டில் படுத்திருப்பார். பிரகாஷ் ராஜ், பிரபு, மற்ற நடிகர்களும் சுற்றி இருக்கின்றனர். நான் டயலாக் பேசி நடிக்க வேண்டும். எனக்கு வசனமே வாயில் வரவில்லை. டென்சன் மிக அதிகமாகி விட்டது. இறுக்கமான சூழலில் தவித்தேன்.

அப்போது கட்டிலில் படுத்திருந்த கமல், அங்கிருந்த பிரபுவிடம் நமக்கும் இதுபோல் நிறைய தடவை ஆயிருக்குதுல்ல, என சகஜமாக பேச்சுக்கொடுத்து அந்த சூழ்நிலையை இலகுவாக்கினார். சக நடிகையான என் சிரமத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப பேசி, என் டென்சனை குறைத்தார், நான் பிறகு சகஜமாகி விட்டேன் என கூறி இருக்கிறார் நடிகை சிநேகா.

- Advertisement -

சற்று முன்