- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ரஜினி 170 - முக்கால்வாசி சம்பளத்தை பிரபல நடிகர்களுக்கு...

ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ரஜினி 170 – முக்கால்வாசி சம்பளத்தை பிரபல நடிகர்களுக்கு வாரிக்கொடுத்த தயாரிப்பு நிறுவனம் – இதுவா தலைவரே பிரமாண்ட படம்?

- Advertisement -

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்து ரஜினி 170 படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. இந்த படத்துக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. வேட்டையன் என பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களின் படம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட இருக்கிறது, எனக் கூறியிருந்தார். ஆனால், படம் குறித்த சில தகவல்களை பார்க்கும்போது, ரஜினி சொன்ன பிரமாண்டம், ரஜினி 170 படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளத்தில் தான் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்துக்கான மொத்த பட்ஜெட் 165 கோடி ரூபாய்தான். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சம்பளம் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படத்துக்கு ரஜினி 110 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், இந்த படத்துக்கு, ரூ. 20 கோடி குறைத்துக்கொண்டு, ரூ.90 கோடி ரூபாய் மட்டுமே ரஜினி சம்பளம் பெற்றதாகத் தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம், லைகா நிறுவனம், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தை தயாரிக்கிறது. எனவே, இந்த சலுகை என்றும் தெரிய வந்துள்ளது. ஜெயிலர் படத்துக்கு முன்பே, ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் என்பதாலும், சம்பளத்தை கூட்டவில்லை என்றும் ஒரு தகவல் உள்ளது.

இந்நிலையில், படத்தின் மொத்த பட்ஜெட் 165 கோடி ரூபாயில், ரஜினிக்கு ரூ.90 கோடி போக, மீதமுள்ள 75 கோடி ரூபாயில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா போன்றவர்களுக்கு 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதர நடிகர், நடிகையர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ள டெக்னிஷீயன்களுக்கு உள்பட படத்தின் தயாரிப்பு செலவுகளுக்கு என, மொத்தமாக 30 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது, படத்தின் மொத்த பட்ஜெட்டில், ரூ. 135 கோடி ரூபாயை படத்தின் முக்கிய நடிகர்களுக்கு அள்ளித் தந்துவிட்டு, மீதி 30 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். வழக்கமாக, நடிகர்களின் சம்பளத்தை விட, படத்தின் தயாரிப்பு செலவுதான் அதிகமாக இருக்கும். இங்கே, நடிகர்களுக்கு வாரி கொடுத்துவிட்டு, தயாரிப்பில் சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் காட்டுகிறது தயாரிப்பு நிறுவனம். அப்புறம், படத்தில் என்ன பிரமாண்டம் இருக்கப் போகிறது என்று தலைவர் ரஜினி சொல்கிறார் என்பது தெரியவில்லை. நடிகர்களின் சம்பளத்தை தான் பிரமாண்டம் என்கிறாரோ தலைவர் ரஜினி.

சற்று முன்