- Advertisement -
Homeபொழுதுபோக்குலேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் இவரா, இந்தி படமும் தயாரிக்க போறாரா...

லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் இவரா, இந்தி படமும் தயாரிக்க போறாரா – அந்த இயக்குநர் பத்தியா சொல்றீங்க?

- Advertisement -

இப்போது காமெடி நடிகர்கள் ஹீரோக்கள் ஆகின்றனர். ஹீரோக்கள் காமெடி நடிப்புக்கு மாறுகின்றனர். திடீரென ஹீரோக்கள் வில்லன்களாக மாறி நடிக்கின்றனர். வில்லன் நடிகர்கள், குணச்சித்திர நடிகர்களாக மாறுகின்றனர். ஹீரோக்கள் டைரக்டர் ஆகின்றனர். இயக்குநர்கள், நடிகர்கள் ஆகின்றனர். இந்த வரிசையில், பரபரப்பான இந்த இயக்குநர் இப்போது தயாரிப்பாளர் ஆகிறார். அது தமிழ் படத்திலும், அடுத்து இந்தி படத்திலும் தொடர வாய்ப்பு உருவாகி உள்ளது.

சினிமாவை பொருத்த வரை எல்லாவிதங்களிலும் தொழில் செய்வது எப்படியும் நல்ல வருவாய் ஈட்டித்தரும் வழிமுறைகளாகவே இருக்கிறது. நடிப்பு, இயக்கம், தொழில் சார்ந்த பல பணிகள் என ஒவ்வொரு வேலைக்குமான சம்பளம், வருமானம் தனியாக கிடைக்கவே செய்கிறது. இயக்குநராக பெறும் சம்பளத்தை, தயாரிப்பாளராகவும் அடைந்துவிட முடிகிறது. பணிகளில் வேறுபட்டாலும், சினிமா கற்றுத் தந்த அனுபவம் பலவிதங்களிலும் பணியாற்றி வெற்றி பெற உதவுகிறது.

சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்று, பிளாக் பஸ்டர் மூவியாக பேசப்பட்டது. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு ஜெயிலர் படம் சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து கவின் நடிக்கும் படத்தை அவரது உதவியாளர் சிவா இயக்குகிறார். இந்த படத்தை நெல்சன் தயாரிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்த தகவல்தான்.

இதைத்தொடர்ந்து, அதே போல் வெற்றிப்படங்களை தந்துவரும் ஒரு இயக்குநர் இப்போது தயாரிப்பாளராக மாறுகிறார். முதலில் ஒரு தமிழ் படத்திலும், அதைத்தொடர்ந்து இந்தி படம் ஒன்றை தயாரிக்கவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் இயக்கிய படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், பிரபல இயக்குநரான இவர் தயாரிப்பாளராவது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் அந்த தயாரிப்பாளர். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் – நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றை, இயக்குநர் ரத்னக்குமார் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். மேலும், ரத்னக்குமார் பிளாப் படங்களை வரிசையாக தந்தவர் என்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே இதில் நயன்தாரா நடிக்க ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் – நயன்தாரா நடித்தாலும் இருவரும் ஜோடியாக அதாவது கதாநாயகன், கதாநாயகி கேரக்டர்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை போலவே, இந்தி படம் ஒன்றிலும் லோகேஷ் கனகராஜை தயாரிப்பாளராக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதுவும் ஏறக்குறைய உறுதியாகி விடும் என்றே தெரிகிறது. லியோ படம் ரிலீஸ் ஆகாத நிலையிலேயே, லோகேஷ் கனகராஜூக்கு அடுத்தடுத்து தயாரிப்பு வாய்ப்புகள் குவிகின்றன.

சற்று முன்