- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெட் வேகத்தில் செல்லும் தனுஷின் 50வது பட பணிகள்... நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் கோலிவுட் திரை...

ஜெட் வேகத்தில் செல்லும் தனுஷின் 50வது பட பணிகள்… நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் கோலிவுட் திரை உலகம்…

- Advertisement -

நடிகர் தனுசுக்கு கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்க, எந்தவித முதல் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல ஃபீல் குட் மூவியாக திருச்சிற்றம்பலம் இருந்தது.

அதுமட்டுமல்லாமல் தனுஷின் கேரியரிலேயே முதல்முறையாக 100 கோடி ரூபாய் வசூலையும் திருச்சிற்றம்பலம் பெற்றது. இதன்பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்தார். இரட்டை கதாபாத்திரத்தில் அவர் வர, அதில் கதிர் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதல்முறையாக நேரடி தெலுங்கு படமான வாத்தியில் அவர் நடித்தார். இந்த திரைப்படமும் தனுஷிற்கு டீசண்டான வெற்றியை கொடுத்தது. தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த முடித்திருக்கிறார். ராக்கி சாணி காகிதம் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அடர்ந்த தாடி, நீளமான முடி, கையில் துப்பாக்கி என படுமாஸாக இதில் தனுஷ் காட்சியளிக்கிறார். இதன் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி படத்தில் நடித்த அதிதி பாலன் வருகிறாராம்.

- Advertisement -

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து ஐம்பதாவது படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். அவரே இயக்கி நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம்தான் தொடங்கியது. இருப்பினும் எந்தவித இடைவெளியும் இல்லாமல் ஒரே கட்டமாக படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் நடத்தி முடித்து இருக்கிறார் தனுஷ். கிட்டத்தட்ட படத்தில் 95 சதவீத பணிகள் முடிந்திருக்கிறதாம். இன்னும் ஒரு பாடல் மட்டும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் தான் படமாக்கப்பட உள்ளதாம். இயக்குனராக தனுஷின் வேலையை பார்த்து, கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்