- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஞ்சு எழுத்துக்கு அர்த்தம் சொன்னா, அஞ்சு லட்சம் ரூபாய் பரிசு, கவிஞர் வைரமுத்து அறிவிப்பு...

அஞ்சு எழுத்துக்கு அர்த்தம் சொன்னா, அஞ்சு லட்சம் ரூபாய் பரிசு, கவிஞர் வைரமுத்து அறிவிப்பு – ஒரு எழுத்துக்கு ஒரு லட்சம் பரிசாம்… அடேங்கப்பா

- Advertisement -

கவிஞர் வைரமுத்து, கவிப் பேரரசு என அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவில், தன் பாடல்களால் பல சிகரங்களின் உச்சங்களை தொட்டவர். பாடல் ஆசிரியராக மட்டுமின்றி, சிறந்த எழுத்தாளராக தன் படைப்புகளை கவிதை, கதை நூல்களாக வைரமுத்து தந்துக்கொண்டே இருக்கிறார்.

கல்லடி படாத கனி மரங்கள் இல்லை என்பது போல, இவரும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சிக்கியவர்தான். பல காயங்களை கண்டவர்தான். குறிப்பாக சின்மயி இவர் மீது கூறிய குற்றச்சாட்டு, பல விமர்சனங்களுக்கு காரணமானது. எனினும் ஒரு கவிஞராக, பாடல் ஆசிரியராக, எழுத்தாளராக வைரமுத்து அவரது என்றென்றும் மதிப்புமிக்க படைப்பாளியாகவே பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர், வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம் போன்றவை இவர் எழுதிய நல்ல கதை நூல்கள். இதுதவிர இவர் முதல் முறையாக எழுதிய கவிதை நூல் வைகறை மேகங்கள். அதுதவிர எண்ணற்ற நிறைய கவிதை நூல்களை வைரமுத்து எழுதி இருக்கிறார். வைரமுத்து, எழுதுவதில் மட்டுமின்றி பேச்சாற்றலிலும் மிகச் சிறந்தவர்.

இப்போது அவர் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எழுதிய கவிதை நூலின் தலைப்பில் வரும் மகாகவிதை என்ற ஐந்து எழுத்துகளுக்கு அர்த்தம் சொன்னால், ஒரு எழுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்து, வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, உலகத் தமிழ் உறவுகளே வணக்கம். மகாகவிதை இந்த தலைப்பை முன்வைத்து ஒரு அறிவுப்போட்டியை அறிவிக்கிறேன். மகாகவிதை இந்த தலைப்பில் உள்ள ம,கா,க,வி,தை என்ற 5 எழுத்துகளில் ஒவ்வொருஎழுத்திலும், இந்த நூலின் உள்ளடக்கம் ஒளிந்திருக்கிறது.

இந்த 5 உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிவாருக்கு பரிசு. ஓர் எழுத்து ஒரு லட்சம் வீதம் 5 லட்சம் ரூபாய் பரிசு தருகிறோம். பரிசு வெளியீட்டு விழாவில் மேடையில் வழங்கப்படும். விடை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – mahaakavithai.vairamuthu@gmail.com சரியான விடை சொல்லுங்கள், 5 லட்சம் அள்ளுங்கள் என கூறியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) 30ம் தேதி வரை மட்டுமே எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்