- Advertisement -
Homeபொழுதுபோக்குபல சினிமா தியேட்டர்களில் லியோ 4 காட்சிகள் தான், ஒரு காட்சியை வேண்டும் என்றே தவிர்த்த...

பல சினிமா தியேட்டர்களில் லியோ 4 காட்சிகள் தான், ஒரு காட்சியை வேண்டும் என்றே தவிர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் – இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

விஜய் நடித்த லியோ திரைப்படம், நேற்று முன்தினம் 19ம் தேதி, தமிழ்நாடு உள்பட கேரளா, கர்நாடகா. ஆந்திரா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. வசூலில், பல படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய நிலையில், லியோ முன்வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஜெயிலர், ஜவான், விகரம் படங்களை எல்லாம் லியோ பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, லியோ சிறப்பு காட்சிகளை திரையிட, தயாரிப்பாளர் தரப்பில் பலகட்டமாக முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதிகாலை 4 மணி ரசிகர் சிறப்பு காட்சிக்காக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னையை கொண்டு சென்றது. இறுதியில், தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதிகாலை 4 மணி காட்சிக்கு நிச்சயம் அனுமதி இல்லை என்றே உத்தரவிட்டது.

- Advertisement -

அதன்பிறகு காலை 7 மணிக்கு காட்சிக்காக கேட்ட நிலையிலும், அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளாத நிலையில், காலை 9 மணிக்கு முதல் சிறப்பு காட்சி என்பதே முடிவானது. அதே வேளையில் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில், அதிகாலை 4 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. தமிழக ரசிகர்கள் பலரும் பெங்களூரு, பாலக்காடு, திருவனந்தபுரம் சென்று அதிகாலை காட்சியை கண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த சிறப்பு காட்சிகள், தினசரி 5 காட்சிகள் என 19 முதல், 24ம் தேதி வரை லியோ படத் தயாரிப்பாளர் தரப்பில் பலமாக போராடி பெற்ற நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளை திரையிடப்பட்டு வருகிறது. தினமும் 5 காட்சிகள் என்பது இல்லை. இதற்கு படத்தின் நேரத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் என்பதால். காலை 9 முதல் இரவு 1.30 மணிக்குள், அரசு நிபந்தனையின் படி 5 காட்சிகளை திரையிட முடியாது என்பது தியேட்டர் உரிமையாளர்களின் பதிலாக உள்ளது.

- Advertisement -

ஆனால் உண்மையில் நடந்தது, தயாரிப்பாளர் தரப்பில் அவரது பங்காக 65 முதல் 75 சதவீதம் வரையும், தியேட்டர் உரிமையாளர் தரப்பில் 25 முதல் 35 சதவீதம் பங்கு என்ற நிலைப்பாட்டை எடுத்ததுதான். இதனால், தயாரிப்பாளர் தரப்பு அதிக லாபமடையும் நிலையில், தியேட்டர் உரிமையாளர்களுக்கு போதிய லாபம் கிடைக்காது. பெரிய அளவில் ஏமாற்றமே ஏற்படும்.

வழக்கமாக 50க்கு 50 என்ற நிலையில் இருந்து, இந்த முறை அதிக பங்கு சதவீதம் கேட்டதால், அந்த நிபந்தனைப்படி படம் திரையிட்டால், தங்களுக்கு கட்டுப்படியாகாது. எந்த லாபமும் இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்த நிலையிலும், தயாரிப்பாளர் தரப்பில் வற்புறுத்தியதால் 5க்கு 4 என்று காட்சிகளை குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இன்னும் 5 காட்சிகளாக திரையிட்டு இருந்தால், வசூல் பன்மடங்கு அதிகரித்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்