நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இளம் நடிகராக, நம்ம வீட்டுப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டு இருந்தார். மாவீரன் படத்தை அடுத்து, அவர் நடித்த அயலான் படத்தை, ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தனர். நிச்சயம் இந்த படம் தீபாவளி, அல்லது பொங்கலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், பொங்கலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கி இருக்கிறார். இன்று நேற்று நாளை, மிக அருமையான அறிவியல் படம். டைமிங் மெஷின் சப்ஜெக்ட்டை மிக யதார்த்தமாக, நடைமுறை வாழ்க்கையோடு கலந்து சொன்ன சூப்பர் ஹிட் படம். அதனால், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்தனர்.
இதற்கிடையே, இசையமைப்பாளர் இமான் கொளுத்திப் போட்ட பிரச்னை, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டது. அதாவது, குடும்பத்தில் ஒருவராக பழகிய சிவகார்த்திகேயன், எனக்கு வெளியில் சொல்ல முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டார் என இமான் கூறி இருந்தார்.
இந்த விஷயம் கடந்த இரண்டு வாரங்களாக, சமூக வலைதளங்களில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிகிறது. இந்த விஷயம் குறித்து, சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது, சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக இளம் பெண் ரசிகைகள் மத்தியில் சிவகார்த்திகேயன் இமேஜ் வெகுவாக சரிந்துவிட்டது.
ஆனால், இதுவரை இசையமைப்பாளர் இமான் தன்னை பற்றி கூறிய கருத்துக்கு மறுப்போ, விளக்கமோ, பதிலோ தராமல் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அதாவது, நடிகர் விஜய் சொன்ன மாதிரி, உசுப்பேத்தறவங்க கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவங்க கிட்ட கம்முன்னும் இருந்தால்தான், உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று, அவர் ஒரு இசை வெளியீட்டு விழாவில், தன் ரசிகர்களுக்கான ஒரு பொதுவான அறிவுரையாக அப்படி தெரிவித்திருந்தார்.
விஜய் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டவர் போல், தன்னை பற்றி இமான் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல், மவுனமாக, பதிலே கூறாமல் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது, அவருக்கு எதிர்வினையாக மாறி, இன்னும் இமானின் குற்றச்சாட்டுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. இதற்கிடையே, அயலான் படம் ரிலீஸானால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்களா, படம் அதிக நாட்கள் ஓடி எதிர்பார்த்த வெற்றியை பெறுமா என்ற மாபெரும் குழப்பத்தில், தவிப்பில், டென்சனில் அயலான் படக்குழுவினர் இருக்கின்றனர்.





