- Advertisement -
Homeபொழுதுபோக்குகரணம் தப்பினால் மரணம், 100 அடி பள்ளத்தில் விஜய் செய்த காரியம், கேட்கவே பயங்கரமா இருக்கே

கரணம் தப்பினால் மரணம், 100 அடி பள்ளத்தில் விஜய் செய்த காரியம், கேட்கவே பயங்கரமா இருக்கே

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, செவன் ஸ்கிரீன் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியிருந்த நிலையில் “லியோ” திரைப்படமும் வேற லெவலில் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

“லியோ” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் 52 நாட்கள் நடைபெற்றது. மைனஸ் 22 டிகிரி குளிரில் படக்குழுவினர் மிக கடுமையாக உழைத்து படமாக்கினார்கள். அத்திரைப்படத்தில் பணியாற்றிய ஊழியர்களும் மிக தீவிரமாக உழைத்திருந்தனர். அவர்களின் கடினமான உழைப்பை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் படக்குழுவினர் ஒரு டிரிப்யூட் வீடியோவையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர் காஷ்மீரில் விஜய் செய்த சாகசத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

“முதல் நாள் காஷ்மீரில் போய் இறங்கியபோது விஜய் என்னிடம் கேட்டார், ‘ஷூட்டிங் போயிடலாமா இல்லை பேக்கப் பண்ணி சென்னை கிளம்பிடுவோமா?’ என்று கேட்டார். ஏனென்றால் அங்கே அவ்வளவு பனி இருந்தது. சாலைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டிருந்தது. நாங்கள் ஜனவரி 31 ஆம் தேதி காஷ்மீருக்கு சென்றோம். அங்கே விஜய் காரில் ரூமிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலைகள் எல்லாம் பனியால் மூடிப்பட்டிருந்ததால் ஒரு கட்டத்தில் கார் நகராமல் நின்றுவிட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள். விஜய் சார்தான் காரை தள்ளிக்கொண்டு வந்தார். கொஞ்சம் தவறினால் கூட 100 அடிப்பள்ளத்தில் விழுந்திருப்போம்” என கூறினார்.

சற்று முன்