தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் கலைஞராக மாறியிருக்கிறார் நடிகர் மணிகண்டன். காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் நாளை குடும்பஸ்தன் படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை ராஜேஷ்வர் காளிசாமி டைரக்ட் செய்திருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பங்களின் வாழ்க்கையை சொல்லும் கதைக்களத்தில் இருந்த படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஷங்கர், நான் ஹீரோவாக படம் இயக்க விரும்பும் நடிகர்களில் மணிகண்டனும் ஒருவர் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்தளவுக்கு நடிகர் மணிகண்டன் அதிக கவனம் பெற்ற ஒரு வளரும் கலைஞராக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, என்னுடன் படித்த என் நண்பன், அவனது குடும்பத்தினர் தெலுங்கு. அதனால் தெலுங்கு படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக அவன் சின்ன வயதில் இருந்தே இருந்தான். டப்பிங் ரைட்டராகவும் இருந்தான்.
அப்போ டப்பிங் பேச போகும்போது என்னையும் கூட கூட்டீட்டு போவான். உன் வாய்ஸ் நல்லா இருக்கு, ஏன் டப்பிங் பேசக்கூடாது என்று என்னை கேட்பான். அப்போது தெலுங்கு படங்களுக்கு, தெலுங்கில் இருந்து தமிழ் படங்களுக்கு சின்ன சின்ன கேரக்டர்களுக்கு நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதற்கு அவன் என்னை யூஸ் பண்ணிக்குவான்.
எனக்கு டப்பிங் பேசறதை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும். கார்டூன் படம் இங்கிலீஷ் படம் தெலுங்கு படம் என எவ்ளோ படங்களுக்கு அப்படி டப்பிங் பேசறதை உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் கற்றுக்கொள்ள எதுவும் நினைத்தது இல்லை. கத்துக்கவும் இல்லை. அங்க போனால், புரடக்சனில் பொடிதோசை வாங்கித் தருவார்கள். அதற்காக தான் போனது.
ஆனால் தொடர்ந்து டப்பிங்கை வேடிக்கை பார்த்ததால் எனக்கு டப்பிங்கில் லிங்க் மீட்டர் பற்றி எல்லாம் கொஞ்சம் தெரிந்தது. அப்போது என் நண்பனின் அண்ணன், என்னை டப்பிங் படங்களுக்கு எழுதச் சொன்னார். அப்படி தான் நான் டப்பிங் ரைட்டராக மாறினேன் என்று நடிகர் மணிகண்டன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகராவதற்கு முன்பே டப்பிங் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ரைட்டர் பணிகளிலும் மணிகண்டன் இருந்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





