தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. ஒரு வாரத்தில் மட்டும் 461 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதன் வெற்றி விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் தளபதி விஜய், நடிகை திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், ரத்னகுமார், தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், திரையுலகில் இருப்பது ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே புரட்சி கலைஞர், ஒரே நடிகர் திலகம், ஒரே தல என்று கூறி அசர வைத்தார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான சர்ச்சைக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், லியோ திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். விமான நிலையத்தின் கழிவறையில் இருக்கும் போது கூட இளைஞர் ஒருவர் லியோ அப்டேட் கேட்டார். இங்கு புரூஸ்லி மைக்கேல் ஜாக்சன் என இரண்டு லெஜன்ட்களை பற்றிதான் நான் படித்திருக்கிறேன்.
ஆனால் இங்கு இருக்கும் ஒரே ஒரு லெஜெண்ட் விஜய் மட்டும்தான். அவருக்காக என் நெஞ்சை கிழித்து இதயத்தை வெட்டி பரிசாக கொடுப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து விஜய் இருக்கும் பகுதிக்கு சென்ற அவர், தளபதியின் முன்பு தலைவணங்கி முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆனால் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றே மிஷ்கினுக்கு தெரியவில்லை என்றும், இத்தனை பெரிய இயக்குனர் ஏன் இவ்வளவு மட்டமாக நடந்து கொள்கிறார் என பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் விஜய்க்கு அவர் ஜால்ரா போடுவதாகவும் சிலர் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு மிஷ்கின் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் எப்போதும் மற்றவரிடம் மனசில் இருந்து தான் பழகுவேன். என்னை எப்போதும் பணிவில்லாதவன் என்றே கூறுகின்றனர். அதற்காகத்தான் விஜய் இடம் பணிந்து முத்தம் கொடுத்தேன். அதற்காக இவ்வளவு பெரிய விமர்சனமா?. இப்போதும் கூறுகிறேன் விஜய் ஒரு நல்ல மனிதன். அவர் படத்தில் நடித்த போது என்னை அவர் ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.





