ரஜினிகாந்த் நடித்த படம் என்றாலே, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாள்தான், ரசிகர்களுக்கு தீபாவளி. ஜெயிலர் படத்தை ரசிகர்கள், கொண்டாடி தீர்த்தனர். இப்போது ரஜினி நடிப்பில் ரஜினி 170 படம் தயாராகி வருகிறது.
திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்டமாக மும்பை சென்ற படக்குழு அங்கு ரஜினி, அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டு திரும்பியுள்ளது. அடுத்தகட்டமாக தீபாவளிக்கு பிறகு 3ம் கட்ட படப்பிடிப்பு, மீண்டும் நாகர்கோவிலில் துவங்க உள்ளது.
இதற்கிடையே விஷ்ணு விஷால், விதார்த் நடிப்பில் லால் சலாம் என்ற படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. வரும் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் என ஏற்கனவே சொல்லப்பட்டது.
இந்த பாடல் காட்சிகளை, ஏஆர் ரகுமான் இசையமைத்து தந்தால் அடுத்தகட்டமாக பாடல் காட்சிகைள படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில், லால் சலாம் படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. இது பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது லால் சலாம் படத்தில் ரஜினி நடித்த சில காட்சிகள் எரேஸ் ஆகி விட்டது. அதாவது ஹார்டு டிஸ்க்கில் இருந்த அவர் நடித்த காட்சிகள் காணாமல் போய்விட்டது. இதனால், படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. அந்த காட்சிகள் இருந்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும்.
இப்போது, ஹார்ட் டிஸ்க்கில் காணாமல் போன படக்காட்சிகளை மீட்டு எடுப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து இதுசார்ந்த ஒரு தொழில்நுட்ப கலைஞரை வரவழைக்க உள்ளனர். அவர் வந்து அந்த காட்சிகளை மீட்டு தந்தால் மட்டுமே, லால் சலாம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற நெருக்கடியா நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், ரஜினி இருக்கும் டைட் ஷெட்யூலில், லால் சலாம் படத்தில் ரிஷூட் பண்ண இப்போதைக்கு வாய்ப்பே இல்லையாம்.





