நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன், மற்றொரு பெயரில் எஸ்டிஆர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை டி. ராஜேந்தரை போலவே இவரும் சினிமாத்துறையில் பல விஷயங்களையும் கற்றுக்கொண்டவர்தான். நடிப்பு, பாடல், இசை, நடனம், டைரக்சன் எல்லாமே இவருக்கு கை வந்த கலைதான்.
ஆனால், அப்பா டி. ராஜேந்தர் பெண்கள் விஷயத்தில் படு கெட்டிக்காரர். சினிமாவில் நடிப்புக்காக கூட, பெண்களை தொட்டு நடிக்க மாட்டார். மகன் சிம்பு, நேர் எதிரானவர். பெண் தோழிகள் அதிகம். அதில் குறிப்பிடத்தக்கவர் இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. வல்லவன் படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து, பிரிந்து விட்டனர்.
சிலம்பரசனை பொருத்த வரை, படப்பிடிப்புக்கு தளங்களுக்கு சரியான நேரத்தில் வரமாட்டார். இயக்குநர் சொல்கிற விஷயங்களை அப்படியே கேட்டு நடிக்க மாட்டார். திடீர் திடீரென படப்பிடிப்பு தளத்தில் இருந்து காணாமல் போய்விடுவார் என பலவிதமான குற்றச்சாட்டுகள் உண்டு.
இதை எல்லாம் உண்மை என்று சொல்வதைப் போலவே அவரது நடவடிக்கைகளும் இருந்ததால், சில ஆண்டுகள் அவரது படங்களே இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மாநாடு, படம் நல்ல ஒரு திருப்புமுனையாக சிம்புவுக்கு அமைந்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்புவுடன் எஸ்ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்த படம் வேற லெவலில் வெற்றி பெற்றது.
ஆனால், அந்த படத்துக்கு பிறகு சிலம்பரசன் நடிப்பில் ஒரு படம் கூட இதுவரை வெளிவரவில்லை. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் சிம்பு நடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. வரலாற்று பின்புலம் கொண்ட இந்த கதையில் சிம்பு நடித்து வருவதாகவும் தகவல் பரவியது.
ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கவில்லை. அடுத்த 2024ம் ஆண்டில் தான் துவங்கும் என்று இப்போது உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கி, ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் இந்த படம், 2025ம் ஆண்டில்தான் ரிலீஸ் ஆகிறது என்பதும் முடிவாகி உள்ளது. அதற்குள் வித்யாசமான கெட்டப்பில் சேகுவாரா ஸ்டைலில் சிம்பு இருந்த புகைப்படங்களை வைரலாக்கி, படப்பிடிப்பு நடந்து வருவதாக பலரும் கிளப்பி விட்டது புரளிதான் என்பதும் உறுதியாகி விட்டது.





