- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர், மூன்று பேரை பழிவாங்க தான் இந்த நாளை தேர்வு செய்தாரா...

பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர், மூன்று பேரை பழிவாங்க தான் இந்த நாளை தேர்வு செய்தாரா தனுஷ்? – அம்பலத்துக்கு வரும் சீக்ரட் விஷயங்கள்

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படம் ஒரே பாகம்தான் என்பதும் முடிவாகி விட்டது. ஏற்கனவே 2ம் பாகம் எடுத்த விஐபி 2, மாரி 2 படங்கள் தந்த அனுபவங்கள், தனுஷூக்கு பாடம் புகட்டி விட்டன.

நடிகர் தனுஷின் 50வது படம் என்பதால், இந்த படத்தை அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களிடமும் கொண்டு செல்ல தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். இன்னும் 2 மாதங்கள் இருப்பதால், அதற்குள் படத்துக்கு தேவையான அளவுக்கு பிரமோசன் ஏற்படுத்தி விடும் முயற்சிகளை திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் முதல் கட்டமாக சென்னை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்களை திரட்டி வந்து, இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார். இப்போதுதான் நடிகர் விஜய், கார்த்தி அங்கு தங்களது நிகழ்ச்சிகளை நடத்திய நிலையில், தனுஷ்சும் தனது ரசிகர்கள் கெத்தை காட்ட முடிவு செய்திருக்கிறார்.

பொங்கல் படங்கள் குறித்த வெளியீட்டில் திடீர் டுவிஸ்ட்டாக, லால் சலாம் படம் பொங்கலுக்கே வெளியாகிறது என்று உறுதியாக தெரிய வந்திருக்கிறது. அதாவது ஜனவரி 26ம் தேதிக்கு இந்த படம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இப்போது பொங்கலுக்கே வௌியிட்டு விடலாம் என, அந்த படத்தை வௌியிடும் ரெட் ஜெயின்ட் மூவி இறுதி முடிவு எடுத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம், அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சில குழப்பங்கள் நீடிப்பதாக தெரிகிறது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்துக்கு தியேட்டர் வசூல் பிஸினஸ் கிடைக்காததால், அந்த படம் ஒருவேளை பொங்கலுக்கு வராமல் போகலாம் என்ற நிலையில், லால் சலாம் ரிலீஸ் உறுதியாக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் கேப்டன் மில்லர் தனுஷ், லால் சலாம் படத்தில் வரும் தனது மாமனார் ரஜினியை எதிர்த்து வசூலில் வெற்றி பெறுவாரா, அல்லது தனது மனைவி இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு கடும் போட்டியாக இருப்பாரா, அல்லது ஒருேவளை அயலான் ரிலீஸானால், சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுப்பாரா என, ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்