- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளுக்கு நாள் பாராட்டு மழையில் நனையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்த வார்த்தைகள்...

நாளுக்கு நாள் பாராட்டு மழையில் நனையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?…

- Advertisement -

பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். கார்த்திக் சுப்புராஜின் திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய மைல் கல்லை தொட்ட திரைப்படம் ஜிகர்தண்டா.

ஒரு ரவுடிக்கும், இயக்குனருக்குமான கதைக்களத்தை மிக சுவாரசியமாக காட்சிப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், அந்த ஒரு திரைப்படத்தின் மூலமே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். சினிமாவிற்கு உள்ளேயே சினிமா தனத்தை காட்சிப்படுத்திய விதம், ரவுடியை கோமாளித்தனமாகும் இயக்குனரின் வித்தை என கச்சிதமாக அதில் கார்த்திக் சுப்புராஜ் கையாண்டிருப்பார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரம் முதலில் ராகவா லாரன்ஸ்க்கு தான் சென்றது. ஆனால் அவர் நடிக்க முடியாமல் போக, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பாபி சிம்ஹா. அசால்ட் சேதுவாகவே அவர் படத்தில் வாழ, தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு தேடி வந்தது.

இப்படியான சூழலில்தான், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருக்கிறார். முதல் பாகத்தை தவறவிட்ட ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் மதுரை ரவுடியாக மிரட்டி இருக்கிறார். தொடர் வெற்றி படங்களில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா, இந்தப் படத்திலும் ரசிகர்கள் மெச்சுக்கட்டும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஹீரோவாக ஆசைப்படும் ரவுடி, அந்த ரவுடியை கொன்றால் தான் போலீஸ் வேலை கிடைக்கும் என்னும் சூழ்நிலையால் அவரிடம் இயக்குனராக நடிக்கும் எஸ் ஜே சூர்யா, இவர்களின் வாழ்க்கையில் மலைவாழ் மக்களின் பிரச்சினை உள்ளே நுழையும் கதை என சுவாரசியமாக காட்சி அமைப்பை கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருப்பதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அந்த திரைப்படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி பூவை போன்றது. கார்த்திக் சுப்புராஜ் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். தனது நடிப்பால் ராகவா லாரன்ஸ் மிரள வைத்திருக்கிறார். அவரால் இப்படியும் நடிக்க முடியுமா என்று பலரையும் பேச வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் நம்மை கைதட்டவும், சிந்திக்கவும், அழவும், திகைக்கவும் வைத்திருக்கிறார் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்