- Advertisement -
Homeபொழுதுபோக்குமனைவியோட, லவ்வரோட, பிரண்டோட தான் பல பேர் படம் பார்ப்பாங்க - ஆனா கார்த்திக் சுப்புராஜ்...

மனைவியோட, லவ்வரோட, பிரண்டோட தான் பல பேர் படம் பார்ப்பாங்க – ஆனா கார்த்திக் சுப்புராஜ் இவங்களோட போய் படம் பார்த்திருக்காரே?

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக இருக்கிறார். ஜிகர்தண்டா படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இவரது இயக்கத்தில் வேற லெவலில் இருந்தது. ரஜினியை அதில் செம மாஸ் ஆக காட்டியிருந்தார்.

அதுவும் பேட்ட படத்தில் வரும் பிளாஸ்பேக் காட்சிகள், தரமாக இருந்தன. ரஜினி – திரிஷா காம்பினேஷைன ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்த படத்தில் சிம்ரனுடன் ரஜினி நடித்த காதல் காட்சிகள் செம ரொமான்ஸ் ஆக. பழைய படங்களில் ரஜினியை பார்ப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

- Advertisement -

இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பேட்ட படத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து வெளிவந்த கார்த்திக் சுப்புராஜ் படம். இந்த படமும் முதல் படமான ஜிகர்தண்டா போலவே, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக அமைந்துவிட்டது.

தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா என 2 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இதுவரை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜப்பான் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் போய்விட்டது. அதனால் ஜப்பான் படத்துக்கு பதிலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்க்க வரும் ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில், தண்டிக்குடி என்ற மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மக்கள் நடித்துள்ளனர். யானைகள், மலைகள் என இந்த படத்தின் ஒளிப்பதிவு வேற லெவலில் இருப்பதால், ஒளிப்பதிவு இயக்குநர் திருவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினியை சந்தித்த படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டி தள்ளியுள்ளார். தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள், கார்த்திக் சுப்புராஜை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பதிவை புகைப்படத்துடன் செய்துள்ளார். அதாவது, இந்த படத்தில் நடித்த தணடிக்குடி மலைவாழ் மக்களுடன் அவரும், தியேட்டரில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்துள்ளார். பெரிய திரையில் அவர்கள் வருவதை பார்த்து மகிழ்ந்த அந்த மலைவாழ் மக்களை பார்த்து நானும் மகிழ்ந்தேன் என, நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்