விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் வெளியான சூழலில் விஜய் ரசிகர்களை தவிர்த்து பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. அதேசமயம் இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். அதற்காக அண்மையில்கூட சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ சக்சஸ் மீட் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிவிக்கப்பட்டார். யுவன் ஷங்கர் ராஜா புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68ன் பூஜை போடப்பட்டது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, ஜெயராம், மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்தப் படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகலாம் என்று கருதப்படுகிறது . பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை போடப்பட்ட பிறகு அங்கு வைத்தே ஒரு பாடல் ஷூட் செய்யப்பட்டது.
அந்தப் பாடலில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடனமாடியதாகவும் மதன் கார்க்கி பாடலை எழுதியதாகவும் ராஜுசுந்தரம் பாடலுக்கு கோரியோ கிராஃபி செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழுவானது பாங்காக் சென்றது. அங்கு சரியான ஆக்ஷன் காட்சி மற்றும் சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. அதுதொடர்பான புகைப்படமும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா கான்ஜுரிங் கண்ணப்பண் என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதில் இடம்பெற்றிருக்கு No one Sleeps Here என்ற பாடல் நாளை வெளியாகிறது. இதனையொட்டி ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு உருவாக்கியிருக்கின்றனர். அந்த வீடியோவில் வரும் சதீஷ், தளபதி 68 படத்தின் பாடலை அர்ச்சனா கல்பாத்தி மேடம் (தளபதி 68 தயாரிப்பாளர்) கேட்டுட்டு வர சொன்னாங்க என கூறுகிறார்.
Tomorrow at 11! #NobodySleepsHere#ConjuringKannappan
Produced by @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
Directed by @selvinrajxavier
A @thisisysr musical@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin…— AGS Entertainment (@Ags_production) November 17, 2023
அதற்கு பதிலளிக்கும் யுவன் ஷங்கர் ராஜா, அதெல்லாம் தேவையில்லை. வெங்கட் பிரபு வெளியேதான் இருக்கிறார். அவரிடமே நான் போட்டு காண்பித்துக்கொள்கிறேன். நீங்கள் போங்க. அவர் இப்போ உள்ளே வந்துடுவார் என்று கூறும்படி ரகளையான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.





