- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் எதுக்கு அந்த நடிகைக்கு அதை வாங்கி கொடுக்கணும்? சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த விஷயம்...

விஜய் எதுக்கு அந்த நடிகைக்கு அதை வாங்கி கொடுக்கணும்? சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த விஷயம் – தளபதி ரசிகர்கள் அப்செட்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அடுத்ததாக தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளன்று துவங்குகிறது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த படத்தை டைரக்டர் எச். வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருப்பதால், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேர அரசியல்வாதியாக தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார். இப்போது கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்துள்ள விஜய், அடுத்தக் கட்டமாக மதுரையில் கட்சியின் மாநில மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள், மக்களுக்கான திட்டங்கள் என்பன குறித்து அந்தக் கட்சி மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அப்போது கட்சிக்கொடியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இந்த விழாவில் ரஜினிகாந்த், அஜித்குமார் உள்பட நடிகர் விஜயின் நெருங்கிய திரையுலக நண்பர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழ் காலமாக அவர் மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே நடிகை திரிஷாவுடன் அவர் ‘கிசுகிசு’க்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரிஷாவுடன் லியோ படத்தில் நடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி சங்கீதா கூறியதாகவும் விஜய் அதையும் மீறி அந்த படத்தில் அவர் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி லியோ படத்தில் திரிஷா விஜய் உதட்டு முத்தக்காட்சியில் நெருக்கமாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அடுத்து வெளிவர உள்ள கோட் படத்திலும், ஒரு குத்தாட்ட பாடலுக்கு திரிஷா, விஜய் நடனம் ஆடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஏற்கனவே பஞ்சாயத்து உள்ள நிலையில், இப்போது விஜய் குறித்த மேலும் ஒரு பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த மாதம் தான் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், நான் பார்த்த முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தது தளபதி விஜய்தான் எனக் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் எதற்கு அவருக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்