- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சந்திரபாபு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான், அந்த பாக்யராஜ் படம் - எம்ஜிஆர் சிவாஜியை...

நடிகர் சந்திரபாபு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான், அந்த பாக்யராஜ் படம் – எம்ஜிஆர் சிவாஜியை விட அதிக சம்பளம் கேட்டவர் இவராமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில், இன்று ரஜினி, கமலை விட அந்த காலத்தில் பெரிய அளவில் சாதனை படைத்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜி என்றால் அது மிகையல்ல. ஏனெனில், இன்றும் தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆர் தான் முன்னிலை வகிக்கிறார். அதேபோல், தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் இடத்தை யாரும் நெருங்கவே முடியாது.

இந்நிலையில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் நடிகர் சந்திரபாபு. இப்போதைய 20கிட்ஸ் வேண்டுமென்றால் சந்திரபாபு தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சந்திராபு மிக முக்கிய கலைஞராக தமிழ் சினிமாவில், வலம் வந்தவர். மிக ஆடம்பரமாக வாழ்ந்தவர்.

- Advertisement -

அந்த காலத்தில், சந்திரபாபு போல உடை அலங்காரம் செய்ய முடியாது. உயர்தர காரில்தான் வலம் வருவார். கையில் எப்போதும் பாரின் சிகரெட் டின் இருக்கும். சென்ட் வாசனை அவர் அந்த இடத்தை விட்டு சென்ற பின்பும் வெகுநேரம் மணம் வீசிக் கொண்டு இருக்கும்.

தமிழ் சினிமா நடிகர்களில் மிக ஆடம்பரமான ஒரு வாழ்க்கை வாழ்ந்த நடிகர் சந்திரபாபு, காமெடியன் ரோல்களில் நடித்தாலும் எம்ஜிஆர் சிவாஜி வாங்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் தனக்கு அதிகமாக சம்பளம் வழங்கவேண்டும் என கறாராக பேசி வாங்குவாராம். அவர்களை விட நான் சிறந்த நடிகன் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்துள்ளது.

- Advertisement -

இப்படிப்பட்ட சந்திரபாபு வாழ்க்கையில் வெகு ஆடம்பரமாக திருமணம் நடந்தது. வசதியான வீட்டில் இருந்துதான் பெண் எடுத்து அவரது கழுத்தில் தாலி கட்டினார். ஆனால், திருமணமான அன்று இரவு, அவரது மனைவி ‘நான் ஒருவரை ஆசையாக காதலித்தேன். ஆனால், என்னை வற்புறுத்தி உங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இப்போதும் அவருடன் வாழவே ஆசைப்படுகிறேன், என கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட சந்திரபாபு, அவருக்கு ஆறுதல் சொன்னார். பின் அடுத்த நாளே அவரது காதலரை வரவழைத்து தன் மனைவியை அவருடன் அனுப்பி வைத்தார். அதற்கு பிறகு அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிறகு பின்னாளில் சொந்த படம் எடுத்து, வறுமையில் வாடி தன் இறுதிகாலத்தை கழித்தார். சந்திரபாபு கதையை தான், அந்த 7 நாட்கள் என்ற படத்தை பாக்யராஜ் எடுத்ததாக பலரும் கூறுவதுண்டு.

- Advertisement -

சற்று முன்