- Advertisement -
Homeபொழுதுபோக்குஜோதிகாவையே ஓவர் டேக் பண்ணிடுவாங்களோ? சந்திரமுகி 2 கெட்டப்பில் கங்கனா ரனாவத் எப்படி இருக்குறாங்க பாருங்க,...

ஜோதிகாவையே ஓவர் டேக் பண்ணிடுவாங்களோ? சந்திரமுகி 2 கெட்டப்பில் கங்கனா ரனாவத் எப்படி இருக்குறாங்க பாருங்க, வைரல் புகைப்படம்

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” திரைப்படம் திரையரங்குகளில் 300க்கும் அதிகமான நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. “சந்திரமுகி” திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்,.சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். ஜோதிகா சந்திரமுகி வேடத்தில் பார்வையாளர்களை அசரவைத்திருந்தார். குறிப்பாக “ராரா” பாடலில் சந்திரமுகி கெட்டப்பிலேயே ஆடிய நடனம் பலரையும் வியக்கவைத்தது.

- Advertisement -

பல காட்சிகளில் ஜோதிகா ரஜினிகாந்தை விடவும் அதிகமாகவே ஸ்கோர் செய்திருந்தார். குறிப்பாக சந்திரமுகி அறையில், சந்திரமுகியின் நகைகளை எடுத்துப்போட்டுக்காட்டி ரஜினியிடம் அவர் கூறும் காட்சி, 90ஸ் கிட்ஸ்களின் இரவுகளை பயமுறுத்தியது. இவ்வாறு காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வரும் திரைப்படமாக “சந்திரமுகி” திரைப்படம் அமைந்தள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஜோதிகா, ரஜினிகாந்த் ஆகியோரின் பங்கை போலவே வடிவேலுவின் பங்கும் மிக முக்கியமான ஒன்று. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இப்போதும் பிரபலமானவை.

இவ்வாறு ரசிகர்களின் மனதை வென்ற திரைப்படமாக “சந்திரமுகி” வலம் வரும் நிலையில் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படம் உருவாகி வருகிறது. “சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இதில் சந்திரமுகியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

- Advertisement -

“சந்திரமுகி” திரைப்படத்தை இயக்கிய பி.வாசுவே இத்திரைப்படத்தையும் இயக்கி வர, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இணையத்தில் சந்திரமுகி கெட்டப்பில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ராகவா லாரன்ஸும் இடம்பெற்றுள்ளார். அப்புகைப்படம் இதோ…

- Advertisement -

சற்று முன்