ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். லக்கி பாஸ்கர் என்னும் மாபெரும் வெற்றியை கொடுத்த கையோடு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கி அட்லூரி. முதலில் இந்த திரைப்படம் ஏதோ ஒரு உண்மை கதையை தழுவியே எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.
ஆனால் இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த வெங்கி கல்லூரி, இது முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படம் என்று தெரிவித்தார். நிச்சயம் இது ஒரு ஃபேமிலி என்டர்டைன்மெண்ட் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி இருவரும் பழனிக்கு சென்று முருகரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ராதிகா மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலிவுட் நட்சத்திரமான அனில் கபூரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மலையாள இயக்குனர் சித்து மாதவனுடன் கைகோர்க்கிறார் சூர்யா. ஏற்கனவே ஜித்து மாதவன், பகத் பாசிலை வைத்து ஆவேசம் என்னும் தரமான திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
கேங்ஸ்டர் பாணியில், நகைச்சுவையை அதிகப்படுத்தி அதில் ஆக்ஷனையும் கலந்து கட்டி அடித்திருந்த அந்தத் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மலையாள திரை உலகை தாண்டி தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து ரசித்தார்கள். இப்படியான சூழலில் ஜித்து மாதனுடன் சூர்யா கை கோர்த்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க போலீஸ் ஸ்டோரி ஆக எடுக்கப்படுகிறதாம். ஆனால் வழக்கமான உள்ள போலீஸ் கதையிலிருந்து இது நிச்சயமாக மாறுபட்டு இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு மலையாளத்தின் முன்னணி இசையமைப்பாளரான சுசில் ஷியாம் மெட்டு போட இருக்கிறார். இதற்கு முன்னதாக மஞ்சுமல் பாய்ஸ், ஆவேசம் ஆகிய திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருந்ததால், தமிழிலும் ஒரு தரமான ஆல்பத்தை எதிர்பார்க்கலாம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





